Saturday, March 14, 2009

மட்டக்களப்பு, அமிர்தகளி ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் பேராலய நூதன இராஜகோபுர, ஆலய புனருத்தாபன மகா கும்பாபிஷேகம் – 2013

ஈழமணித் திருநாட்டின் கிழக்கிலங்கையில் இராமாயண இதிகாச வரலாற்றுச் சிறப்புமிக்கதும் மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றும் ஒருங்கே அமையப் பெற்றதுமான ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் பேராலய மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் வைகாசி திங்கள் 29ம் நாள் (12.06.2013) அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.
கிரியைகள் யாவும் 03.06.2013 அன்று ஆரம்பமாகி, ஆனி மாதம் 09, 10, 11 ஆகிய மூன்று தினங்களில் பக்தர்கள் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
12.06.2013 அன்றைய தினம் எம் பெருமான் ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையாருக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது.

நடைபெறவுள்ள கிரிகை விபரங்கள்
திகதி நேரம் விடயம்
03.06.2013 காலை 06.00 மணி முதல் கிரிகைகள் ஆரம்பம்
08.06.2013 இரவு 09.30 மணி யாகங்கள் ஆரம்பம்
இரவு 10.30 மணி முதல் 11.30 மணி வரை தூபிஸ்த்தாபனம்
தீபஸ்த்தாபனம்
யந்திரஸ்த்தாபனம்
விம்பஸ்த்தாபனம்
09.06.2013 பகல் 11.00 மணி முதல் எண்ணைக்காப்பு
10.06.2013  
11.06.2013 பி.ப 3.00 மணி வரை
12.06.2013 காலை 09.30 – 10.45 ருத்திர விமான அபிஷேகம்
காலை 11.00 மணி முதல் 11.45 மணி வரை மூல மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம்

பின்னர் மண்டலாபிஷேக பூசைகள் 48 நாட்களும் பிற்பகல் 6.00 மணி முதல் நடைபெறும்.

இதனைத் தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) மண்டலாபிஷேக பூசைகள் இடம்பெறவுள்ளன. மண்டலாபிஷேக பூசை செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாகத்தினருடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
மகா கும்பாபிஷேகத்திற்கு தங்களாலான நிதியுதவி, பொருளுதவி, சரீர உதவிகளை செய்து எம்பெருமான் ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் பேரருள் பெற்றேகுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

வங்கிக் கணக்கு இலக்கம் : 2700575 BOC மட்டக்களப்பு.
தொலைபேசி : 065 222 3578

அனுமன் சிலையானான்....

அன்னையா இப்படி கேட்டாள்?

எம்பெருமாள் ராமனின் துணைவி ஜானகி இப்படிக் கேட்டாள்?

அனுமான் மெய் வியர்த்து நின்றான்

உச்சி முதல் உள்ளங்கால் வரை நடுங்கிப்-போனான் அனுமன்

கிஷ்கிந்தையை விட்டுக் கிளம்பி மகேந்திர-கிரி வந்து அங்கிருந்து தென்னிலங்கை வந்து சேர்ந்து இந்த நொடிவரை இப்படி ஒரு கேள்வி அன்னை கேட்பாள் என்று ஆஞ்சனேயன் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

இப்படிச் சீறுவாள் என தெரிந்ந்திருந்தாள் சொல்லியிருக்கமாட்டான். நினைக்க, நினைக்க நம்பமுடியவில்லை அனுமனுக்கு.

கேட்டதில் தவறு எதுவும் இருப்பதாகவும் தெரியவில்லை.

அப்படி என்னதான் நடந்தது?

ஜானகிதேவியை, தென்னிலங்கை வேந்தன் ராவணன் சிறையெடுத்துச் சென்றான்.

தேவியைத்தேடி எட்டுத்திக்கும் வானரப்-படை சென்றது. தென்னிலங்கை நோக்கி அனுமான் புறப்பட்டான். கணையாழியுடன்.

மகேந்திரகிரி மலையிலிருந்து ஒரேதாவாகத் தாவி, ஆகாயத்தில் பறந்து, வழியில் தடைகள் பலகடந்து இலங்கையை அடைந்தான். லங்காபுரியை கண்டான்.

ராவணனின் தலைநகரம் லங்காபுரி செல்வச்செழிப்புடன் விளங்கியது. மாடமாளி-கைகளுக்குள்ளும், அந்தப்புரங்களுக்குள்ளும் பொன்னும் மணியும் விரவிக் கிடந்தன. அழகில் சிறந்த அசுரக் கூட்டம் அணுப்-பெண்ணுமாக விரவிக்களித்தனர். களியாட்-டமும் கொண்டாட்டமும் மிகப்-பலவாய் இருந்தது. தேவலோகத்தையும் தோற்கடிக்கும் வனப்புடன் ஜொலித்தது.

இவற்றுள் எதிலும் நாட்டம் கொள்ளாத அனுமான கடமையில் கருத்தாய் இருந்தான்.

அன்னையைத் தேடி அலைந்தான். கொண்-டாட்ட வேடிக்கைகளுக்கு மத்தியில் சீதை இருக்கமாட்டாள் என நம்பிக்கொண்டு, எங்காவது காராகிரகத்தில் அடைத்து வைத்-திருக்கலாம் என்றெண்ணி சிறைச்சாலைகளில் தேடினான்.

எங்கும் காணக்கிடைக்கவில்லை. சிறைச்-சாலைகள் வெறுமனே இருந்தன.

நகரம் முழுவதும் சுற்றி அலைந்தான்.

வானுயர்ந்த கோபுரங்கள் நிலவையும் தொட்டு-விடுவன போன்று கம்பீரமாக நிமிர்ந்து நின்றன. ஒழுங்கான, சீரான இடை-வெளியுடன் தெருக்கள் அழகுற அமைந்து இருந்தன தெருக்கள். நகரமே கண்ணைக் கவரும் விதத்தில் அமைக்கப்பட்டிருந்தது.

சொர்க்கத்தை விடவும் சிறப்புற அமைத்-திருந்தான் தேவலோக சிற்பி மயன், ராவண-னின் பட்டத்துராணி மண்டோதரியின் தந்தையல்லவா அவன்.

நகரெங்கும் தேடியாயிற்று எங்கும் சீதா-தேவி-யைக் காணவில்லை.

நகர்விட்டு நீங்கினான்.

சுற்றுவட்டார காடுகளில் நுழைந்தான்.

உயர்ந்த மரங்கள் அடர்ந்துசெழிப்பாக வளர்ந்திருந்தன. பகலிலேயே வெளிச்சம் உட்புகத காடுகள். இரவிலோ சொல்லத்தேவை-யில்லை. தொட்டால் கையில் தட்டுப்படுமோ என எண்ணவைக்கும் மையிருட்டு.

எங்கும் நிசப்தம்.

ஒளிபொருந்திய தேவியை காட்டிலா வைத்திருப்பான் பாதகன், வாய்ப்பில்லை என நினைத்துக் காடுதாண்டி திரும்பினான்.

வரும் வழியில் அசோகவனம் கண்டு நின்றான்.

அங்கே சிறுசிறு குடில்கள் அவற்றுள் வெளிச்சப்பொட்டு.

மரக்கூட்டத்தில் கிளைக்கு கிளை தாவி இறங்கி வந்தான். தரைக்குச் சற்று மேலேயே நின்றான்.

அங்கே.

அழகும், அமைதியும் பொருந்திய சோகமே வடிவெடுத்த பெண்ணொருத்தி அமர்ந்திருக்க, அவளருகே அசுரர் இனப்பெண்கள் சிலர் தூங்கி வழிந்து கொண்டிருந்தார்கள்.

ஒரு சிலர் விட்ட குறட்டை ஒலி மட்டும் மெலிதாக கேட்டுக்கொண்டிருந்தது.

சோகமே உருவான அந்த அழகுப் பது-மையே அன்னை சீதாதேவி எனக் கண்டான். வானத்து மின்னல் வனத்தில் வந்து ஓய்வெடுப்-பதுபோல் அமர்ந்திருந்தாள்.

மெதுவாகக் கீழிறங்கி அன்னையை அளவெடுப்-பதுபோல் மேலும் கீழும் நோக்கி, பின்வணங்கி வினயமாக நின்றான் அனுமான்.

அன்னையே மெல்ல குரலெழுப்பி நின்றான். எந்த ஓசையும் தூங்கிவிட்ட மற்றவர்-களை உசுப்பா வண்ணம் உவம்பி நின்றான்

தூங்கியிருக்கவில்லை சீதை.

தலைதூக்கி நேர்நோக்கி குரல்வந்த திசை-நோக்கி அனுமனை கண்டு கேட்டாள் யார் நீ? என்னை ஏய்க்க குரங்கு வேடத்தில் வந்து நிற்கும் ராவணனா? என வெகுண்டாள்.

சொல்லின்செல்வன் அனுமன் விளைத்-தோடு, அன்னையே, நான் ராவணனல்ல. எம்பெருமான் ராகவன் அனுப்பிய தூதுவன். என் பெயர் அனுமான் என்று கூறி கணையாழி-யைக் கொடுத்தான்.

கணையாழியை பெற்றுக்கொண்ட கீதை, அதை அண்ணலை நோக்கும் வாஞ்சையோடு நோக்கினாள். அழுதாள், அரற்றினாள். பின் தன்னைத் தேற்றிக்கொண்டு வந்தவனை வினவினான்.

எம்பெருமாள் நலமா? குரலே ராமன்மீது அவள கொண்டிருந்த காதல் உணர்த்தியது.

அம் என்று எவ்வாறு கூற. தங்களை பிரிந்த ஒவ்வொரு நாளும், துன்பமும் துயருமாக நடைபிணமாக உள்ளார். தங்களை மீட்பதே அவரை மீட்பதாகும் எனக் கூறினான். மேலும் பல ஆறுதல் மொழிகள் கூறி அன்-னையை தேற்றினான். சொல்லின் செல்வன் அனுமான்.

பின் அன்னையிடம் சூடாமணி பெற்றுக்-கொண்டு திரும்பினான்.

திரும்பும்போது....

அன்னை கேட்டாள். அனுமனே, என்னை இதுவரை கண்டதில்லை நீ, நானும் உன்னை கேள்விப்பட்டதுகூட இல்லை. இருப்பினும் என்னை எவ்வாறு இனம் கண்டாய்.

அனுமான் தயங்கினான்.

தயங்காமல் கூறு - சீதை இதை இயல்-பாகவே ராமனின் வாய்மொழி அறியும் ஆவலில் கேட்டாள்.

அனுமன் மேலும் தயங்கினான், மென்று விழுங்கினான். பொறியில் அகப்பட்ட எலியாக விழித்தான். அவன் தயக்கம் அவளை மேலும் ஆவலுக்குள்ளாக்கியது.

சீதாதேவி மேலும் மேலும் வற்புறுத்தவே மெல்லத் தயங்கித் தயங்கி கூறுவான்.

அண்ணல் என்னிடம் அடையாளங்கள் பல கூறியுள்ளார். அது தங்கள் உருவம் எவ்-வாறு இருக்கும் என்று, அதை நான் எவ்வாறு கூறுவது என்று தயக்கத்துடன் கூறினான்.

எம்பெருமாள் என் மணாளன் மட்டுமல்ல. என் தெய்வமும்கூடதான். எனவே அவர் கூறியது எதுவாயினும் என்னிடம் கூறு என்றாள் சீதை.

அனுமன் வேறுவழியின்றி ராமன் கூறிய-தைக் கூறினான். என் மனைவியின் மார்புக் கலசம் போன்று இருக்கும். பெண்ணுறுப்பு தடங்-கடற்கு உவமை.

என் மனைவியின் மார்பகம், செவ்விளநீரோ? செப்புக்கவசமோ? என ஏதும் உவமை சொல்லத் தெரியாமல் நான் தவிக்கிறேன் என்றான்.

வாராழி கலசக் கொங்கை
வஞ்சிபோல் மருங்குவாள் தன்
தாராளி கலைசார் அல்குல்
தடங்கடற்கு உவமை தக்கோய்
பாராழி பிடரில்தங்கும், பாந்தழும்
பணி வென் றோங்கும்
ஓராளித் தேரும்கண்ட உனக்கு
நான் உரைப்ப தென்ன?

செப்பென்பன் கலசம் என்பன்
செவ்விள நீரும் தேர்வன்
துப்பொன்று திரள்சூ தென்பன்
சொல்லுவன் தும்பிக் கொம்பை
தப்பின்றிப் பகலில் வந்த
சக்கர வாசம் என்பன்
ஒப்பொன்றும் உலகில் காணேன்
பலநினைத்து உலைவன் இன்னும்

(நன்றி - கம்பராமாயணம்)

எனப் பலவாறாக என்னிடம் அய்யன் தங்கள் மறை உறுப்புகளை வர்ணித்துப் பேசினார் என்று கூறி அனுமன் முடிக்கும் முன்னே....

ஜானகி சீறினாள். ஆவேசப்பட்டாள் அடிபட்ட புலியானாள். பிரளயமே வந்தது போலானது. வார்த்தைகள் கத்திகளாய் விழுந்தன.

என் மணாளனா இதைச் சொன்னார்? என்னால் நம்பவும் முடியவில்லை

என் மணாளனை மிதிலை நகர் வீதியிலே வரும்போது அவர் காலழகைக் கண்டே காதல் கொண்டவள் நான். சிவதனுசை தூக்கிநிறுத்தி நானேற்றும்போது அவர் புஜபலம் கண்டு நாணினேன். மாலையிடும் வேளையில் அவர் பராக்கிரமம் கண்டு மலைத்தேன். மணம் முடித்த நாள் முதல் இன்றுவரை என்னை-விட்டு அவர் அகந்திருந்தாலும் அருகில் இருப்பதாகப் பாவித்து காதல்கனல் வளர்த்துக் காத்திருக்கிறேன். அவரா இப்படிச் சொன்னார்?

அனுமனே கேள். கூலிவேலை செய்து பிழைப்பவனும், கடைநிலை மனிதனும் செய்யத் தயங்கும் செயல் இது. எந்த ஒரு மனிதனும் தன் மனையாளை மாற்றானிடம மறை உறுப்புகளை வர்ணிக்க மாட்டான். ஆனால், நாடாளவேண்டிய ராஜகுமாரன், நாளைய அயோத்திமன்னன், ரகுவம்ச குமாரன் இராமபிரான் தன் மனைவியை மாற்றானிடம், அதுவும் என்னைப்பற்றி அறிந்திராத ஒருவன் முன் வர்ணிப்பது கேவலம். வெட்கம். மானம் கெட்ட செயல். இதைக்கேட்டு இப்போதே இங்கேயே செத்திருக்க வேண்டும் நான் எனப் பலவிதம் பேசி ஆவேசப்பட்டாள். அவள் நிலை காளியின் ருத்ரதாண்டவம் போல் இருந்தது.

கண்கள் சிவக்க மேலும் பேசினாள்.

உன் மன்னனிடம் சொல். என்னை மீட்பது அவருக்குப் பெருமையாக இருக்கலாம் என்றாலும் அவருடன் வாழ்வது எனக்குச் சிறுமையே என்று உறுதிபட கூறினாள்.

இதைக்கேட்டுத்தான் சொல்லின் செல்வன் அனுமன் ஒரு கணம் சிலையாகினான் பின் நினைவு தெளிந்து மெய்கலங்கி நின்றான்.

மட்டக்களப்பு

இலங்கையின் கிழக்கு கடற்கரையில் இந்து சமுத்திரத்தினை கடல் எல்லையாகக் கொண்டமைந்த கிழக்கு மாகாணத்தின் மத்தியில் அமைந்துள்ள பரந்த நிலப்பரப்பாகும். இது சராசரியாக கடல் மட்டத்தயுலிருந்து 5 மீட்டர் உயரமுடையதகும். மட்டக்களப்பு நகரின் தனித்துவமான சிறப்பியல்பு யாதெனில் கடல் நீரானது நிலப்பரப்பின் பெரும்பாலன பகுதிகளுக்கூடாக செல்வதுடன் பிரதான நிலப்பரப்பிலிருந்து சிறு நிலப்பரப்புகளையும் தீவுகளையும் கொண்டமைந்த அழகிய கடநீரேரி அமைந்துள்ள்மையாகும். இக் கடநீரேரி நகரின் வடக்காகவுள்ள வெருகல் வரை 73.5 கி.மீ வரையிலும் தெற்காகவுள்ள துறைநீலாவணை வரை 35.2 கி.மீ வரையிலும் பரந்துள்ளது.

கடநீரேரிக்கு குறுக்காக சிறு நிலப்பரப்புகளையும் தீவுகளையும் இணைக்கும் வண்ணம் பாலங்கள் அமைக்கப்பட்டிருப்பது நகருக்கு மேலும் அழஅகு சேர்க்கிறது.மட்டக்களப்பு நகரின் நகராட்சி மையமான புளியந்தீவு இவற்றுள் மிகப்பெரிய தீவாகும்.கோட்டமுனை நிலப்பரப்பை கல்லடியுடன் இணைக்கும் கல்லடிப்பாலமானது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.லேடி மன்னிங் பாலம் என அழைக்கப்படும் இப்பாலம் அமைநத்துள்ள கடற்பரப்பானது மட்டக்களப்புக்கு தனித்துவமான பாடும் மீன்கள் எனப்படும் ஒருவகை மீன்களின் இருப்பிடமாகும்.முழுமதி தினங்களில் இம்மீன்கள் எழுப்பும் ஒலியானது இசையினில் மெட்டமைத்த பாடல் போன்று இருந்த காரணத்தால் இப்பெயர் வழங்கலாயி்ற்று.

மட்டக்களப்பானது இயற்கை எழில் கொண்ட கடற்கரைகளை கொண்டுள்ளது.பாசிக்குடா மற்றும் [[[கல்குடா]] கடற்கரைகள் மிகவும் பிரபல்யமானவை .பாசிக்குடா கடற்கரை மட்டமான நீரினை உடையதும் முருகைக்கற்கள் நிறைந்ததும் நீந்துபவர்களுக்கு மிகவும் இதமானதுமாகும். கல்லடியிலுள்ள கடற்கரையும் மிகக்கூடியளவான மக்களை கவரும் ரம்யமான அமைப்புடையதாகும்.

மட்டக்களப்பின் காலநிலையானது பொதுவாக வெப்பம் கூடியதாக இருப்பினும் வேறுபட்ட பருவகாலங்களில் வெவ்வேறு மாற்றங்களை கொண்டதாக காணப்படுகிறது. மார்ச் முதல் மே வரையான காலப்பகுதி சராசரியாக 32 பாகை செல்சியஸ் அளவுடைய வெப்பநிலை கொண்டதாகவும்,நவம்பர் முதல் பெப்ரவரி வரையான காலப்பகுதி கூடுதல் மழைவீழ்ச்சி கொண்டதாகவும் காணப்படுகிறது. இக்காலப்பகுதியில் சராசரியாக 15 பாகை செல்சியஸ் வெப்பநிலையும் 1400 மில்லிமீட்டர் அளவுடைய மழைவீழ்ச்சியும் காணப்படுகிறது

மட்டக்களப்பு மாவட்டம் வாவியால் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒருபகுதி எழுவான்கரை(சூரியன் எழும் பகுதி அ-து கிழக்குபகுதி) என்றும் மறு பகுதி படுவான்கரை (சூரியன் மறையும் பகுதி அ-து மேற்குபகுதி) என்றும் அழைக்கப்படுகின்றது.காடுகள்
,விவசாய நிலம்,வாவி,முகத்துவாரம்,கடல்,அணைகள்,களப்பு,இயற்கை துறைமுகம்,குளம் போன்ற புவியியல் அம்சங்களை கொண்டுள்ளது.படுவான்கரை பிரதேசம் வளமிக்க விவசாய நிலத்தினை கொண்ட பகுதியாகும்.மட்டக்களப்பு பிரதான நகரினை சூழ்ந்து வாவி காணப்படுவது இயற்கைவனப்பான விடயமாகும்.